search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெரைட்டி சாதம்"

    • சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - ஒரு கப்

    தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

    வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

    தண்ணீர் - ஒரு கப்

    பச்சைப் பட்டாணி - அரை கப்

    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

    பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

    எண்ணெய் - 4 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    பட்டை - 2

    சோம்பு - கால் டீஸ்பூன்

    பிரியாணி இலை - ஒன்று

    ஏலக்காய் - ஒன்று

    செய்முறை:

    தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

    அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

    பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

    இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

    • சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான உணவுகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    சாமை அரிசி - 500 கிராம்,

    வெங்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், சௌசௌ - தலா 100 கிராம்,

    பச்சைப்பட்டாணி - 50 கிராம்,

    தயிர் -அரை கோப்பை,

    இஞ்சி, பூண்டு விழுது, புதினா -தேவையான அளவு,

    சோம்பு, பட்டைப்பொடி - 2 மேசைக்கரண்டி,

    மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க:

    நெய் -100 மி.கி,

    ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு - தலா 2,

    பட்டை, சாதிபத்திரி - சிறிதளவு.

    செய்முறை

    சாமை அரிசி நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து அதில் நெய்யைச் சூடானதும், தாளிக்கக் கொடுத்த பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் புதினாவை சேர்க்கவும்.

    புதினா நன்றாக வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

    தக்காளி குழைய வதங்கியதும் காய்கறிகள், பச்சைப்பட்டாணி சேர்த்து மிளகாய்த்தூள், உப்புடன் ஒரு லிட்டர் (5 டம்ளர்) தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்கு கொதி வந்ததும் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின் சாமை அரிசியைச் சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்பு 5 நிமிடம் தீயை மிதமாக வைத்து மூடி போட்டு வேகவிடவும்.

    பிரியாணி பதம் வந்ததும் இறக்கி புதினா தூவி பரிமாறவும்.

    சூப்பரான சாமை வெஜிடபிள் பிரியாணி ரெடி.

    • சேமியாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று காய்கறிகள் சேர்த்து புலாவ் செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்

    வெங்காயம் - 3

    பச்சைமிளகாய் - 5

    தக்காளி - 3

    பீன்ஸ் - 20

    கேரட் - 2

    பச்சை பட்டாணி - 1/2 கப்

    கொத்தமல்லி - சிறிதளவு,

    இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்

    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    தாளிக்க :

    பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தேவையான அளவு

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெறும் வாணலியில் சேமியாவை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி சிறிது எண்ணெயில் போட்டு நன்றாக பேஸ்டு மாதிரி வதக்கிக்கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப்போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் பச்சை மிளகாய், துருவிய கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியவுடன் தக்காளி பேஸ்டு சேர்த்து வதக்கவும்.

    தேவையான அளவு உப்புடன், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து 4 கப் தண்ணீர் விடவும்.

    தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த சேமியாவை சேர்த்துக் கிளறவும்.

    சேமியா வெந்தது பொல பொல வென்று உதிரியாக வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சேமியா வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • பசியைத் தூண்டும் சக்தி கொத்தமல்லிக்கு உண்டு.
    • கொத்தமல்லியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் வாயு பிரச்சனை தீரும்.

    தேவையான பொருட்கள்

    தக்காளி - மூன்று

    வெங்காயம் - இரண்டு

    பாசுமதி அரிசி - இரண்டு கப்

    இஞ்சி - ஒரு துண்டு

    பூண்டு - எட்டு பல்

    பச்சை மிளகாய் - ஐந்து

    கொத்தமல்லி - ஒரு கட்டு

    எண்ணெய் - தேவையான அளவு

    பட்டை - ஒன்று

    லவங்கம் - ஒன்று

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி கொள்ளவும்.

    சுத்தம் செய்து நறுக்கிய கொத்தமல்லி, தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த விழுதை கழுவிய அரிசியில் போட்டு ஊறவைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அரைத்த விழுதில் ஊறவைத்த அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    மூன்று கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கொத்தமல்லி புலாவ் ரெடி.

    • கம்பில் அரிசியை விட எட்டு மடங்கு இரும்புச்சத்து உள்ளது.
    • கம்பு சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    பால் -1 ½ கப்

    தயிர் ½ கப்

    கடுகு - சிறிதளவு

    உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

    பச்சை மிளகாய் - 1

    காய்ந்த மிளகாய் - 2

    இஞ்சி - 1 துண்டு

    பெருங்காயம் - 1 ஸ்பூன்

    எண்ணெய் - தேவையான அளவு

    கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    * கம்பை புடைத்து சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு, ரவைப் பதத்தில் உடைத்து கொள்ளவும்.

    * உடைத்த கம்புடன் ஐந்து கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் மிதமான தீயில் வேக வைக்கவும். 4 விசில் வந்ததும் இறக்கி, பால் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், சேர்த்து தாளித்த பின் அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கி, கம்பு சாதத்தில் சேர்க்கவும்.

    * கடைசியாக, உப்பு, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கம்பு தயிர் சாதம் ரெடி.

    • கம்பில் உள்ள நார்ச்சத்து வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும்.
    • கம்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது

    தேவையான பொருட்கள்

    கம்பு - 1 கப்

    தண்ணீர் - 2 1/2 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை

    * கம்பை நன்றாக கழுவி 1 கப் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    * தண்ணீரை வடித்துவிட்டு மிக்ஸியில் 4 அல்லது 5 முறை சுற்றி எடுக்கவும். உடைத்த ரவைபோல ஆகிவிடும்.

    * உடைத்த கம்பை மீதமுள்ள 1 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து, உப்பு போட்டு குக்கரில் 5 விசில்கள் விட்டு எடுக்கவும்.

    * குக்கர் சூடு ஆறிய பின்னர் வெளியில் எடுக்கவும். அரிசி வேகவைப்பதைவிட சற்று அதிக நேரம் வேகவிட வேண்டும்.

    * கம்பு சாதம் தயார்!

    • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுக்கலாம்.
    • இந்த புலாவ் செய்ய 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.

    தேவையான பொருட்கள்

    சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ

    பெரிய வெங்காயம் - 5

    நெய் - 2 தேக்கரண்டி

    எண்ணெய் - தேவையான அளவு

    இஞ்சி - ஒன்று

    சின்ன வெங்காயம் - 10

    தக்காளி - 4

    பூண்டு - 10 பல்

    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

    கரம் மசாலா - 2 தேக்கரண்டி

    மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    புதினா - ஒரு கப்

    கொத்தமல்லி - ஒரு கப்

    பச்சை மிளகாய் - 4

    தேங்காய் - அரை முடி

    தாளிக்க:

    கிராம்பு

    பட்டை

    பிரிஞ்சி இலை, ஏலக்காய்

    செய்முறை :

    முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் தண்ணீரில்லாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    தக்காளி, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காயை மிக்ஸியில் அடித்து இரண்டு கப் வருமாறு தேங்காய் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பேனில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

    பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்.

    அதன் பின் வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பொன்னிறமான பின் தக்காளி போட்டு நன்கு குழைய வதக்கவும்.

    பின் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    குக்கரில் கொட்டி அதனுடன் அரிசி, தேங்காய் பால் தண்ணீர் சேர்த்து கிளறி 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.

    வெந்ததும மூடியை திறந்து சூடாக எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான செட்டிநாடு வெஜிடபிள் புலாவ் ரெடி.

    • அன்றாடம் ஒரு கேரட் சாப்பிடும்போது புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
    • பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    உதிரியாக வடித்த சாதம் - 1½ கப்,

    கேரட்- 2

    பீட்ரூட் - 1 பெரியது

    பெரிய வெங்காயம் - 1.

    பச்சை மிளகாய் - 2,

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை - சிறிது,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    பீட்ரூட்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், பச்சைமிளகாய், உப்பு, கேரட், பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடிபோட்டு வேக வைக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வெந்ததும் உதிராக வடித்த சாதத்தைச் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித்தழையை தூவி சூடாக பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கேரட் பீட்ரூட் மிக்ஸ்டு ரைஸ் ரெடி.

    • காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், கோழியை விடக் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
    • கோழி முட்டையில் 11% புரோட்டீன் என்றால் காடை முட்டையில் 13% புரோட்டீன்கள் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    காடை - 4

    சீரகச் சம்பா அரிசி - 750 கிராம்

    வெங்காயம் - 150 கிராம்

    தக்காளி - 100 கிராம்

    பச்சை மிளகாய் - 5

    புதினா இலை - 50 கிராம்

    கொத்தமல்லித்தழை - 50 கிராம்

    மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

    தயிர் - 50 மில்லி

    தேங்காய்ப்பால் - 100 மில்லி

    பட்டை - 2

    ஏலக்காய் - 2

    கிராம்பு - 4

    பிரிஞ்சி இலை - ஒன்று

    இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 100 மில்லி

    நெய் - 50 மில்லி

    பிரியாணி மசாலா செய்ய :

    பட்டை - 2

    ஏலக்காய் - 4

    கிராம்பு - 6

    பூண்டு - 50 கிராம்

    இஞ்சி-1 துண்டு

    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காடையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

    சீரகச் சம்பா அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிரியாணி மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் சிவக்க வறுத்து ஆறியதும், தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக சிவக்க வறுக்க வேண்டும்.

    அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கி, தக்காளி சேர்த்து அது குழையும் வரை வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் கழுவி சுத்தம் செய்த காடையை சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், அரைத்த பிரியாணி மசாலா சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    இத்துடன் தயிர், தேங்காய்ப்பால் தேவையான அளவு தண்ணீர், கழுவிய சீரகச் சம்பா அரிசியைச் சேர்த்து 10 நிமிடம் வேகவிட்டு, பின்னர் தீயை மிதமாக்கி நெய் ஊற்றி கிளறி, புதினா இலை, கொத்தமல்லித்தழை தூவி மூடி போட்டு 20 நிமிடம் தம் போட்டு இறக்க காடை பிரியாணி தயார்.

    ×